
அதன்படி இந்த ஆண்டிற்கான பாதயாத்திரையை முன்னிட்டு கடந்த 27-ந்தேதி பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இந்தநிலையில் நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி விருத்தாசலம் மணிமுத்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், அக்னி கரகம், மயில் காவடி எடுத்து விருத்தாசலம் கடைவீதி, பாலக்கரை, ஜங்ஷன் சாலை வழியாக ஜங்ஷன் குடியிருப்பு சித்தி விநாயகர் கோவிலை அடைந்தனர்.
அங்குள்ள மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 11-ந்தேதி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல உள்ளனர்.