அதிகார மமதையின் உச்சத்தில் ஆட்சியாளர்கள்... பாஜக தலைவர் அண்ணாமலை கடும் தாக்கு

காவல்துறை தன் கண்ணியத்தை காற்றில் பறக்கவிட்டு கண்மூடித்தனமாக செயல்படுவதை விட்டுவிட்டு நியாயமான நேர்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
பெட்ரோல்-டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் பெட்ரோல் விலையில் 5 ரூபாய் குறைப்பதாக சொன்னது தி.மு.க. தான் என முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு பேட்டரி கார்கள் வசதி

காலை முதல் இரவு வரை நடைபெறும் இந்த சேவையால் வயதான பயணிகள், மாற்றுதிறனாளிகள் 2 ஆயிரம் பேர் இதன் மூலம் இலவசமாக பயன்பெற்று வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் 25-ந்தேதி முதல் ஒரு வாரம் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வருகிற 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ஒரு வார காலம் விழிப்புணர்வு இயக்க போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்தியாவை வழி நடத்துகிற அளவுக்கு பா.ம.க.விடம் செயல்திட்டங்கள் உள்ளன- அன்புமணி ராமதாஸ்

பா.ம.க.விடம் ஆட்சி அதிகாரம் இருந்தால், தமிழகத்தில் 75 விழுக்காடு திட்டங்களை நிறைவேற்ற முடியும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை- அரசு விரைவு பஸ்களில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம்

அரசு விரைவு பஸ்களுக்கு தனியார் இணையதளம் வழியாக முன்பதிவு செய்யப்பட்ட வசதி நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் போது அவர்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.
குடிநீர்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் இதுபோன்று வழங்கபடாமல் இருந்தால், அவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பெண் வேடமணிந்து எரியும் நெருப்பை விழுங்கும் பூசாரி- கேட்டவரம் கிடைப்பதாக கூறி குவிந்த பக்தர்கள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அக்கினி காளியம்மனை வழிபட்டனர்.
தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது- கே.எஸ்.அழகிரி பேட்டி

தமிழகத்தில் உருவான அரசியல் கூட்டணிகள் தமிழக காங்கிரசை வளர்ச்சி பெற செய்ய முடியாமல் செய்து விட்டன.
அம்மா உணவகங்களுக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்க முடிவு

அம்மா உணவகங்களில் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுவதால் வரும் காலங்களில் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் அதிரடி சோதனை- ஹெல்மெட் அணியாத 3926 பேர் மீது வழக்கு

அனைத்து வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் விதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
விவேகானந்தா கல்லூரி ஆண்டு விழாவில் விஜய் வசந்த் பங்கேற்பு

தனது தந்தை பயின்ற கல்லூரியில் சென்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றியது மகிழ்ச்சியளித்ததாக, விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்களை தேடி மருத்துவம் பெண் செவிலியர்கள் திரண்டதால் பரபரப்பு

மக்களை தேடி மருத்துவம் பெண் சுகாதார தன்னார்வலர்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
வாணியம்பாடி நெக்னாமலையில் சாலை வசதி இல்லாததால் ஓட்டல் அதிபர் உடலை 8 கி. மீ டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்

50 ஆண்டாக சாலை வசதி இல்லாததால் அங்குள்ள கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் சிகிச்சைக்கு சென்று வர சிரமமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஓட்டல் அதிபர் உடலை டோலி கட்டி தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் பகுதியில் நாளை மறுநாள் முதல் மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் 7 நாள் தொடர் வேலைநிறுத்தம்

ராஜபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்கள் ஒருவார வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளதால் நாள்தோறும் ரூ. 1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஓட்டேரியில் மாதா ஆலய தேர் ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்- 10 பேருக்கு அரிவாள்வெட்டு

ஓட்டேரியில் மாதா ஆலய தேர் ஊர்வலத்தில் மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவரம் ஏரியில் தண்ணீர் இருப்பு முழுவதும் குறைந்தது

கோடைக்காலம் மற்றும் குடிநீர் தேவை அதிகரிப்பால் ஏரிகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.
சொத்துக்களை அபகரித்து கொலை மிரட்டல்- 2 குழந்தைகளுடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தஞ்சம்

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கராபுரம் அருகே 10 லிட்டர் சாராயம் பறிமுதல்

சங்கராபுரம் அருகே 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

பண்ருட்டி அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் ஊழியர்களின் செயலை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.