
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அமரீந்தர்சிங் இடையே ஆலோசனை நடைபெற்றது.
இந்த பின்னணியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 3 கருப்பு வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்துசெய்வதற்கு குறைவான எந்த தீர்வையும் ஏற்றுக்கொள்வது, இந்தியாவுக்கும், விவசாயிகளுக்கும் செய்யும் துரோகம் ஆகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.